• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

யுகேஜி மற்றும் எல்கேஜி குழந்தைகளுக்கு தபால்நிலையம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

ByKalamegam Viswanathan

Mar 6, 2023

யுகேஜி மற்றும் எல்கேஜி குழந்தைகளுக்கு பள்ளியின் சார்பில், பூர்த்தி செய்யப்பட்ட தபால் அட்டைகளை அஞ்சலகத்திற்கு சென்று , தபால் பெட்டியில் சேர்த்தல் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு.
மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள தனியார் (CSR மெட்ரிக்) பள்ளி நிர்வாகம், எல்கேஜி மற்றும் யுகேஜி பிஞ்சு குழந்தைகளுக்கு தபால் கடிதத்தை அஞ்சலகத்தில் சென்று, அங்குள்ள தபால் பெட்டியில் சேர்த்தல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை ஊர்வலமாக அழைத்துச் சென்று, ஒவ்வொரு குழந்தைகளின் கைகளிலும் தபால் அட்டையை (பூர்த்தி செய்யப்பட்ட கடிதத்தை) அங்குள்ள தபால் பெட்டியில் செலுத்தும் முறை பற்றி ஆசிரியை, ஆசிரியர்கள் கூறியபடி கையாண்டனர்.


சின்னஞ்சிறு குழந்தைகள் ஆரம்ப காலத்திலேயே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி நிர்வாகம் மேற்கொண்ட செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது…