• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு அரசு மரியாதை..!!

ByA.Tamilselvan

Feb 5, 2023

மறைந்த பிரபல பாடகி வாணி ஜெயராமுக்கு காவல்துறை மரியாதை செலுத்தப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது (78). வாணி தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி என 18 மொழிகளில் 10,000 மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். அண்மையில் தான் வாணி ஜெயராமுக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருதை அறிவித்திருந்தது. இந்நிலையில், மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் உள்ள ஓமத்தூரார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து, அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனிடையே காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அவரது உடல் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு அவரின் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டது. காவல்துறை சார்பில் 30 குண்டுகள் முழங்க வாணி ஜெயராம் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.