உடல் எடையை குறைக்க சவாலாக எடுத்து குறைத்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றதுசென்னை தனியார் நட்சத்திர விடுதியில் ஒ2 என்னும் உடற்பயிற்சி மையம் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இந்த ஓ2 உடற்பயிற்சி மையங்கள் தற்போது சென்னையில் உள்ள மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், பெசன்ட் நகர், துரைப்பாக்கம், ஆகிய நான்கு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நான்கு உடற்பயிற்ச்சி மையத்தின் கிளைகளில் உள்ள உறுப்பினர்களுக்கு நான்கு வாரங்களில் உடல் எடையை குறைக்கும் சவால் நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டது.
இந்த சவால் நிகழ்ச்சிக்கு ஹனி “ஐ ஷ்ரங்க் மை செல்ஃப்”என்ற பெயரில் நடைபெற்றது. இதில் உடல் எடையை அதிகமாக குறைத்தவர்களுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புகழ்பெற்ற நிகழ்ச்சி தொகுப்பாளரும் திரைப்பட நடிகையுமான ரம்யா சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.