• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அதானி விவகாரம்-நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ByA.Tamilselvan

Feb 2, 2023

அதானி விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி நிலவிய நிலையில் முதலில் மதியம் இரண்டு மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது பின்னர் நால் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
பாராளுமன்றத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். . இந்நிலையில், பாராளுமன்ற மக்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதானி குழும விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதிக்க அனுமதி கோரினர்.இதன் காரணமாக இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் அவை தொடங்கிய போதும் எதிர்கட்சியினர் தொடர்ந்து கேள்வி எழுப்பிய வண்ணம் இருந்ததால் இன்று முழுவதும் நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.