பிரதமர் மோடி அரசு முறை பயணமாக வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடிக்கு அமெரிக்காவுக்கு பயணம் வருமாறு அழைப்பு விடுத்தார். ஜோ பைடன் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது வெள்ளை மாளிகையில் ஜோ பைடன்-மோடி, இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். மேலும் வெள்ளை மாளிகையில் ஜோ பைடன் அளிக்கும் விருந்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அமெரிக்க பாராளுமன்ற கூட்டு கூட்டத்திலும் மோடி உரையாற்றுகிறார்.













; ?>)
; ?>)
; ?>)