நாகை, திருவாரூரை தொடர்ந்து மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரியில் 5ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதிநாகை, திருவாரூரை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதால், மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.