• Thu. Jun 25th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

விரக்தியில் விக்னேஷ் சிவன் கை நழுவி போன அஜீத் படம்

Byதன பாலன்

Jan 30, 2023

கடந்த மே மாதம் அஜித் பிறந்தநாள் அன்று AK62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கத்தில்லைக்கா தயாரிக்க உள்ளது என்ற அறிவிப்பு வெளியானது. இதனை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை வந்த சுபாஷ்கரனுக்கு தனது வீட்டில் வைத்து விருந்து கொடுத்தார்அஜித்குமார்
விக்னேஷ் சிவனிடம் நல்லதொரு கதை உள்ளதாக, லைக்கா நிறுவனம் நம்பியது. இதனை அடுத்து மாஸ் ஹீரோவான அஜித்தை இயக்க விக்னேஷ்ஷ் சிவனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் கூறிய கதை, அஜித்துக்கு சுத்தமாகப் பொருந்தாத ஒரு கதையாக உள்ளது.


எட்டு மாதமாகியும் கதையைத் திருப்திகரமாகத் தயார் செய்யாததன் காரணமாக, படப்பிடிப்பு தொடங்கும் முன்பே, இயக்குனரை மாற்றும் முடிவுக்கு அஜித்தும், சுபாஸ்கரனும் வந்துள்ளனர். இதனை அடுத்து மகிழ் திருமேனிக்கு லைக்காவிலிருந்து அழைப்பு சென்றது. உடனே சுதாரித்துக் கொண்ட மகிழ் திருமேனி நல்ல ஒரு திரில்லர் கதையைத் அஜித்துக்கு சொல்லியுள்ளார். இதனை அஜித் ஏற்றுக் கொண்டதாகத் தகவல்கள் கசிந்துள்ளது.இந்தக் கதை அஜித்துக்கும், சுபாஸ்கரனுக்கும் பிடித்துப் போனதால், அவர்கள் ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பை மகிழ் திருமேனிக்கு கொடுத்து உள்ளார்கள். பெரும் வாய்ப்பு ஒன்றை விக்னேஷ் சிவன் தவறவிட்டுள்ளார்.