• Thu. May 2nd, 2024

பிகினிங் – விமர்சனம்

Byதன பாலன்

Jan 30, 2023

இதய வீணை தூங்கும்போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காணமுடியுமா

என்று கவியரசு கண்ணதாசன் 1963ஆம் ஆண்டு எழுதிய வரிகளுக்கு திரைமொழியில் வடிவம் கொடுக்க முயற்சித்திருக்கிறது
ஆசியாவின் முதல் ‘ஸ்பிளிட் ஸ்கிரீன்’படம் என்கிற பெருமையுடன் திரையரங்குகளில் வெளியாகிருக்கும் ‘பிகினிங்’. திரைப்படம்ஒரே திரையில், இரண்டு காட்சிகள் என்கிற தொழில்நுட்பம்
கதைக்குச் சரியாகப் பொருந்துகிறது. இரண்டுசம்பவங்கள் இறுதியில் ஒரே இடத்தில் முடிவதுதான் கதை என்றாலும் அதைத் தெளிவான திரைக்கதையுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார்
அறிமுக இயக்குநர் ஜெகன் படத்தின் தலைப்பு திரையில் விரிகிறபோதே கதையும் தொடங்கிவிடுகிறது வழக்கமான சினிமா மசாலாக்கள், முன்னணி அல்லது அறிமுகமான நடிகர்கள் இல்லாமல் ஆறு கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு இறுதிவரை பார்வையாளர்களை பதட்டத்துடன் இருக்கையில் அமரவைக்கிறார் இயக்குநர் அவரது திரைக்கதை உயிர்ப்புடன் திரையில் பயணிக்கமாற்றுதிறனாளியாக நடித்திருக்கும்வினோத் கிஷனின் நடிப்பு முழுமையான ஒத்துழைப்பை கொடுத்திருக்கிறது
மாற்றுதிறனாளிகளுக்கேயுரிய உடல்மொழி, பேச்சு, சொல்லியதையே திரும்ப சொல்லுவது, அவர்களுக்கு பிடித்தமான கார்ட்டூன் படம் கண்டு மகிழும் குழந்தை மனசு என அனைத்தையும் படம் பார்ப்பவர்கள் மனதில் பதிய வைக்கிறார் வினோத் கிஷன் ஒரு கட்டத்தில் நடித்திருப்பது மாற்று திறனாளியோ என பார்வையாளனை எண்ண தூண்டுகிறது அவரது நடிப்பு ஒரு திரையில் இவரது ஆதிக்கம் பொங்கிவழிய மறுபக்கதிரையில் நாயகி கவுரி கிஷனின் கதை விரிகிறது கடத்தப்பட்டு அறைக்குள் மாட்டிக்கொண்டு தவிக்கிற தவிப்பு எதிர்த்து போரிட முடியாமல் இயலாமையை வெளிப்படுத்தும் பாங்கு கவுரியின் நடிப்பு மேலோங்குகிறது

மனவளர்ச்சிக் குன்றிய மகனை வைத்துக்கொண்டு,வேலைக்குச் செல்லும் ‘சிங்கிள் மதரி’ன் வேதனையை யதார்த்தமாக வெளிப்படுத்துகிறார் ரோகிணி. கவுரியை கடத்தும் சச்சின், அவர் நண்பர்கள் மகேந்திரன், சுருளி, காதலன் லகுபரன் ஆகியோர் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். மிகக் குறுகிய வாய்ப்பு என்றாலும் காட்சிகளில் இருந்து கண்களை அகல விடாமல் கட்டிப்போட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வீரகுமார் கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பிண்ணனி இசை படத்திற்கு பொருந்திபோகிறது பிரேம்குமாரின் படத்தொகுப்பு படத்தை நெருடல் இல்லாமல் பார்க்க வைக்கிறதுஎழுதி இயக்கியிருக்கும் ஜெகன்விஜயா, உடலை மையப்படுத்தி இயங்கும் மனிதர்களை உள்ளத்தில் தூய்மை வைத்திருக்கும் மனதை வைத்துக் குற்றவாளியாக்குகிறார்.
பிரம்மாண்டங்கள், பாடல் காட்சிகள், அதிரடி சண்டைகள் என எதுவும் இல்லாமல் பார்வையாளனை நேர்த்தியான திரைக்கதையால் திரையரங்குகளில் பார்வையாளனை நெளியவிடாமல் கட்டிப்போட முடியும் என்பதை உண்மையாக்கி இருக்கிறார்கள் பிகினிங் திரைப்படக்குழுவினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *