• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

பட்ஜெட் படங்களை வெளியிடுவது கடுமையான போராட்டம் – பா. ரஞ்சித்

Byதன பாலன்

Jan 30, 2023

அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள படம், ‘பொம்மை நாயகி’. சுபத்ரா, ஹரி, ஜி.என்.குமார், அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி உள்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். யோகிபாபு மகளாக ஸ்ரீமதி நடித்திருக்கிறார். பொம்மை நாயகி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது இதில் கலந்துகொண்டு பேசிய படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான பா.ரஞ்சித்
“ஓடிடி-க்கள் வந்த பிறகு சிறிய படங்களுக்கு வரவேற்பு இருந்தது. ஆனால் தற்போது சிறிய படங்களை ஓடிடி தளங்களில் விற்பது கடினமாக உள்ளது. நெட்பிளக்ஸ், அமேசான் என எதுவாக இருந்தாலும் வருடத்திற்கு 12 படங்கள் வாங்குகிறார்கள் என்றால், அந்த 12 படங்களும் பெரிய நடிகர்களின் படங்களாகத்தான் உள்ளன. திரையரங்குகளிலும் சிறு படங்களுக்கு திரைகள் கிடைப்பதில்லை. தற்போது ஓடிடியிலும் அதே நிலை நீடிக்கிறது. படத்தை ஓடிடியில் விற்பது சாதாரண விஷயம் அல்ல.


சமீபத்தில் வெளியான லவ் டுடேவை தவிர்த்து மக்களிடம் சிறிய படங்களுக்கு ஆதரவு இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றுதான் கூற வேண்டும். இந்த டிஜிட்டல் யுகத்தில் சிறிய படங்களை ஓடிடியில் பார்த்துவிடலாம் என நிறைய மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் சிறிய படங்கள் ஓடிடி தளத்திற்கே செல்ல முடியாத நிலைதான் உள்ளது. இவ்வளவு சிக்கலான சூழலில்தான் பொம்மை நாயகி போன்ற படத்தை பெரும் நம்பிக்கையில் நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது மக்களிடம் இப்படத்தை கொண்டு சென்று விட வேண்டும் என்று முழு மூச்சாக இறங்கி இருக்கிறோம்.பொம்மை நாயகி படத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்தப் படத்தை தயாரித்ததற்கு நீலம் தயாரிப்பு நிறுவனம் பெருமை கொள்கிறது. படத்தில் உள்ள கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். யோகி பாபுவின் நடிப்பில் இப்படம் வேறொரு பரிமாணத்தை காட்டும் என்று நினைக்கிறேன்” என தெரிவித்தார்.