• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

74-வது குடியரசு தின விழா- ஆளுநர் ஆர்.என்.ரவிதேசிய கொடி ஏற்றினார்

ByA.Tamilselvan

Jan 26, 2023

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 74 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றக்கொண்டார்.
நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றினார். இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்று கொண்டார்.. ராணுவம், கடற்படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்புநடைபெற்றது.. குடியரசு தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். தமிழக அரசின் சாதனை விளக்கும் அலங்கார ஊர்திகள் பங்கேற்றனர்.