நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா நினைவு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு நாடகங்கள் போட்டிகள் நடைபெற்றன.வாக்களிப்பதன் முக்கியத்துவம் பற்றி பள்ளி தலைமை ஆசிரியர் .பீ.ரவிக்குமார் உரையாற்றினார். பொறுப்பாசிரியர் அனிடா எஸ்ரா நன்றி கூறினார்.முடிவில் ஓவிய போட்டி, கட்டுரைப் போட்டி வில்லுப்பாட்டு ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.