• Fri. Jan 16th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பிரபல தமிழ் நடிகர் ராமதாஸ் மாரடைப்பால் காலமானார்..!!

ByA.Tamilselvan

Jan 24, 2023

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்த பிரபல நடிகரும், எழுத்தாளருமான ராமதாஸ் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார்.
விழுப்புரத்தை சேர்ந்த ராமதாஸ் சினிமா மீதான மோகத்தினால் சென்னைக்கு புலம்பெயர்ந்து எழுத்தாளராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். ஆயிரம் பூக்கள் மலரட்டும், ராஜா ராஜா தான், நெஞ்சமுண்டு நேர்மை உண்டு, ராவணன் , வாழ்க ஜனநாயகம் , சுயவரம் ஆகிய படங்களை இயக்கிய இவர், எழுத்தாளராக பல படங்களில் பணிபுரிந்துள்ளார். அத்துடன் காக்கிச்சட்டை ,விசாரணை ,அறம் ,விக்ரம் வேதா ,மாரி 2 உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். எழுத்தாளரும் நடிகருமான ராமதாஸின் இறுதி சடங்குகள் இன்று மாலை 5 மணி அளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.