• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

பாலமேடு ஜல்லிகட்டு – சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் , காளை உரிமையாளருக்கு பைக்

Byp Kumar

Jan 16, 2023

தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டான உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு காலை 8 மணிக்கு பாலமேட்டில் தொடங்கவுள்ளது. 800க்கும் மேற்பட்ட காளைகளும், 335 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும், காளைக்கு பைக் பரிசும் வழங்கப்படவுள்ளது
மாட்டுபொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிகட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் 335 மாடுபிடி வீரர்களும், 800க்கும் மேற்பட்ட காளைகளும் பங்கேற்கவுள்ளன.
போட்டியில் பங்கேற்கவுள்ள காளைகளுக்கு மருத்துவபரிசோதனை செய்யப்படுவதோடு, போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீர்ர்களுக்கும் மருத்துவபரிசோதனை செய்யப்படும்.இந்த போட்டிக்காக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என 160பேர் கொண்ட மருத்துவக்குழுவினரும், 6 மொபைல் மருத்துவக்குழுவினர், 15 108ஆம்புலன்ஸ்கள், 60பேர் கொண்ட கால்நடை மருத்துவக்குழுவினரும், கால்நடைக்கான ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புதுறை வாகனங்களும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. போட்டி தொடங்கிய பின்னர் ஒவ்வொரு சுற்றுக்கும் தலா 25 மாடுபிடி வீரர்கள் வீதம் 45 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சுற்று நடைபெறவுள்ளது.
போட்டி தொடங்கியவுடன் முதலில் பாலமேடு கிராம கோவில்களுக்கு சொந்தமான காளைகள் வரிசையாக அவிழ்க்கப்பட்டு பின்னர் போட்டியில் கலந்துகொள்ளும் காளைகள் வரிசையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டது.
போட்டியின் முதலிடம் பிடிக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் ஒன்றும், சிறந்த காளை உரிமையாளருக்கு பைக் ஒன்றும் முதல் பரிசாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சார்பாக வழங்கப்படவுள்ளது.பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறப்பாக விளையாடும் காளைக்கு அலங்காநல்லூரை சேர்ந்த பொன் குமார் சார்பில் கறவை பசு மாடு கன்றுடன் பரிசு வழங்கப்பட உள்ளது.


இதேபோன்று போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக களம் காணும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், மற்றும் சிறந்த காளைகளுக்கும் பைக் , தங்க காசு, லேப்டாப், குக்கர், எல்.இ.டி TV, பிரிட்ஜ், தங்ககாசு, கட்டில் மெத்தை, சைக்கிள், பீரோ போன்ற எண்ணற்ற பரிசுகள் வழங்கப்படவுள்ளது.மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் 1500காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.பாலேமடு ஜல்லிக்கட்டு போட்டியை பாலமேடு கிராம பொது மகாலிங்க மடத்து கமிட்டி சார்பில் அனைத்து சமுதாயத்தினரையும் ஒன்றிணைத்து சமத்துவமாக ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது குறிப்பிடதக்கது.
போட்டியின் போது 1கிலோமீட்டர் தூரம் வரை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு 100மீட்டர் வரை தேங்காய். நார் பரப்பபட்டுள்ளது.காளைக்கான கலெக்சன் பாயிண்டில் உடைப்பு ஏற்படாதவாறு இரண்டடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் போட்டி நடைபெறும் பாலமேடு கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிணறுகளில் காளைகள் உள்ளே விழுந்து காயம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கிணறுகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது