• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அனைத்து யாதவர் சங்க கூட்டமைப்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்

Byஜெ.துரை

Jan 8, 2023

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் முன்பாக யாதவர்கள் தமிழ்நாட்டில் கொலை செய்யப்படுவதை கண்டித்து யாதவர் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுப்புராமன் அவரது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.


இந்த ஆர்பாட்டத்தின் போது தமிழக அரசுக்கு அனைத்து யாதவர் சங்க கூட்டமைப்பு பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். யாதவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வேண்டும். சாதிவாரி கணக்கெடுத்து விகிதாசார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மேய்ச்சல் சமூகம் மேம்பாடு வாரியம்,கால்நடை வளர்ப்பு வாரியம் வேண்டும். தமிழ்நாட்டில் யாதவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுகிறார்கள் அது தொடராத வண்ணம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கி அரசு வேலை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் அவர்களுக்கு ஒட்டுமொத்த யாதவர்களின் கோரிக்கையாக வைத்தனர்.