• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நாளை முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன் வினியோகம்

ByA.Tamilselvan

Jan 2, 2023

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் நாளை முதல் வரும் 8ம் தேதி வரை நேரடியாக வீடுகளுக்கே சென்று வினியோகிகப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, ரூ.1000 ரொக்கம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி வருகிற 9-ந் தேதி பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அன்றே அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.
அனைவருக்கும் வீடுகளுக்கு சென்று நாளை முதல் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்பட உள்ளது. ஒரு நாளைக்கு 200 டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற 8-ந்தேதி வரை டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கும் நாள், வழங்கப்படும் நேரம் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கும். அந்த நேரத்தில் சென்று பொங்கல் தொகுப்பினை பெற்று கொள்ளலாம்.