• Mon. Apr 27th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

திரைப்பிரபலங்கள் பாராட்டும் டாக்டர்

Byமதி

Oct 11, 2021

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘டாக்டர்’. இப்படம் பல்வேறு தடைகளை கடந்து திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் காமெடி, ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என் அனைத்தும் படத்தில் ஒர்க் அவுட் ஆகி உள்ளது. இதனால் டாக்டர் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. திரைப்பிரபலங்கள் பலரும் டாக்டர் படத்தை பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் டாக்டர் படக்குழுவை பாராட்டி இயக்குனர் ஷங்கர் “இந்த கொரோனா காலகட்டத்தில் டாக்டர் எங்களுக்கு சிறந்த சிரிப்பு மருந்தை கொடுத்திருக்கிறார். அனைவரையும் மகிழ்வித்த இயக்குனர் நெல்சனுக்கு பாராட்டுக்கள். குடும்பங்கள் கொண்டாடும் படியான பொழுதுபோக்கு படத்தை கொடுத்த சிவகார்த்திகேயன், அனிருத் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் நன்றி. திரையரங்க அனுபவம் மீண்டும் திரும்பி உள்ளதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது” என டுவிட்டரில் பாராட்டி உள்ளார்

இயக்குனர் சுசீந்திரன் அவர்கள், “குடும்பத்துடன் டாக்டர் படம் பார்த்தேன். சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை அளித்த இயக்குனர் நெல்சன் அவர்களுக்கும், சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.

ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து கூறுகையில், “உருண்டு உருண்டு சிரிச்சேன். கண்ல தண்ணீ வர வர சிரிச்சேன். சிவகார்த்திகேயன் வசீகரிக்கிறார். இயக்குனர் நெல்சன் சிறந்த எழுத்தாளர். அனிருத் படத்தின் முதுகெழும்பு. விஜய் கார்த்திக்கின் ஒளிப்பதிவு அற்புதம். யோகிபாபுவும், டோனியும் சிரிப்பு மருத்துவர்கள்” என பதிவிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் தமன் வெளியிட்டுள்ள பதிவில், “ரியல் டாக்டர்கள் இரவு பகலாக போராடி கொரோனா நோயாளிகளை குணப்படுத்தி உள்ளனர். சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மூலம் திரையரங்குகளை குணப்படுத்தி உள்ளது” என பாராட்டி உள்ளார்.

பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பதிவிட்டுள்ளதாவது: “இத்தகைய பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்த படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். காத்திருந்து திரையரங்கில் வெளியிட்டதற்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.