• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அதிர்ச்சி தரும் தங்கம் விலை உயர்வு

ByA.Tamilselvan

Dec 31, 2022

தங்கம் விலையானது சர்வதேச பொருளாதார நிலவரப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது. அமெரிக்க வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ள நிலையில், இது டாலரின் மதிப்பு ஏற்றம் காண வழிவகுத்துள்ளது. இதனால் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலிக்கிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று உயர்ந்து விற்பனையான தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 15 ரூபாய் உயர்ந்து, ரூ.5,130-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, ரூ.41,040-க்கு விற்பனையாகிறது.