• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பட்டாசு வியாபாரி வீட்டில் தீ விபத்து நான்கு பேர் கருகி சாவு

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பட்டாசு வியாபாரி தில்லை குமார்.
தன் வீட்டில் பட்டாசுகளை வைத்திருந்துள்ளார்.
இன்று விடியற்காலை சுமார் 4 மணி அளவில் எதிர்பாராத விதமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் வீட்டிலிருந்த பட்டாசுகள் முழுவதும் வெடித்து சிதறியுள்ளது.
தீ விபத்தில் பட்டாசு வெடியில் சிக்கிக்கொண்ட தில்லை குமார் இவரின் மனைவி பிரியா தாயார் செல்வி மற்றும் அருகே வீட்டில் வசித்து வந்த பெரியக்கா ஆகிய 4 பேர் உடல் கருகி இறந்தனர்.

பட்டாசு வியாபாரி தில்லை குமார்.. தன் வீட்டில் பட்டாசுகளுக்கு இடையில் அனுமதி இல்லாமல் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்து விற்பனை செய்து வந்தார் என்றும்… வீட்டில் இருந்த நாட்டு வெடிகுண்டுகளும் தீ விபத்தில் சேர்ந்து வெடித்து உயிர் சேதம் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.
மேலும் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.