• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவிலில் 52 வார்டுகளை 3 மாதங்களில் ஆய்வு செய்த மேயர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் மொத்தம் 52 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள மக்கள் பிரச்சனை குறித்து நேரடியாக பொதுமக்களிடம் சென்று மேயர் மகேஷ் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வினை வார்டு வாரியாக மாநகராட்சி மேயர் மகேஷ் இருசக்கர வாகனத்தில் சென்று மேற்கொண்டார். கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி தனது ஆய்வை துவங்கிய மேயர் மூன்று மாதங்கள் கடந்து இன்று தனது ஆய்வை தனது சொந்த வார்டான 4 ஆவது வார்டில் நிறைவு செய்தார். மேயர் நேரடியாக வந்து குறைகள் கேட்டு சென்றதால் விரைவில் 52 வார்டுகளில் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று அப்பகுதியில் உள்ளவர்கள் எதிர்பார்க்கின்றனர்.