• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சபரிமலையில் இதுவரை
29 லட்சம் பேர் சாமி தரிசனம்

நடப்பு மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த சீசனில் வரலாறு காணாத கூட்டம் சபரிமலையில் அலைமோதியது.
இந்நிலையில் சீசனின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை இன்று நடக்கிறது. இதனையொட்டி நேற்று மாலையில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதற்கிடையே நேற்று சன்னிதானம் விருந்தினர் மாளிகையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி நடை திறக்கப்பட்டு 39 நாட்களில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ரூ.222 கோடியே 98 லட்சத்து 70 ஆயிரத்து 250 வருமானம் கிடைத்துள்ளது. இதில் காணிக்கையாக ரூ.70 கோடியே 10 லட்சத்து 81 ஆயிரத்து 986 வசூலானது. மேலும் 29 லட்சத்து 8 ஆயிரத்து 500 பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். இதில் 20 சதவீதம் பேர் குழந்தைகள். இவ்வாறு அவர் கூறினார்.