• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

காபி மூட்டை திருடிய கும்பல் கைது

நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள்ள கையுன்னி பகுதியில் காபி மூட்டை திருடிய கும்பளை காவல்துறையினர் வலை வீசிபிடித்தனர்..
சேரம்பாடியை அடுத்துள்ள அய்யன்கொல்லி பகுதி சன்னக்கொல்லி இப்பகுதியில் அதிகளவு தோட்டங்கள் நிறைந்த பகுதி இங்கு காப்பி குருமிளகு காபி தேயிலை போன்ற பணப்பயிர்கள் விலைவிக்கப்படுகின்றனர். இன்னிலையில் நவம்பர் டிசம்பர் ஜனவரி போன்ற மாதங்களில் காபி குருமிளகு அறுபடை செய்வது வழக்கம். இந்நிலையில் சன்னக்கொல்லி என்ற இடத்தில் வசித்து வருபவர் சுந்தர்ராஜ் த.பெ.ராமசந்திரன் இவருக்கு பத்து ஏக்கர் நிலம் உள்ளது இதில் காபி குருமிளகு தேயிலை போன்றவை பயிரிட்டுள்ளார். . இந்த தோட்டத்தை பராமரித்து பார்த்துக் கொள்ள ராகவன் என்பவரை பணியில் உள்ள வேலையாட்களுக்கு சூப்ரவைசராக பனியாற்றியும் வருகிறார். இன்னிலையில் 14.ஆம் தேதி காப்பி பறித்து காய வைத்து சேர்க்கப்பட்டது. இன்னிவையில் சேர்க்கப்பட்டிருந்த 12.காப்பி மூட்டைகள் திடீரென காணமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது . இது சம்மந்தமாக சேரம்பாடி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் . கூடலூர் காவல் கண்கானிப்பாளர் மகேஸ்குமார் உத்திரவின் பெயரில் சேரம்பாடி உதவி ஆய்வாளர் தினேஷ்குமார் மகளீர் காவல்நிலைய ஆய்வாளர் அமுதா ..காவலர் சிஜி .நவிசந்திரன் போன்றோர் குற்றவாளிகளை தேடி பிடித்து கைது செய்தனர் ..
பின்னர் குற்றவாளிகளிடம் விசாரித்த போது எங்களுக்கு மது அருந்தவும் செலவு செய்ய பணம் இல்லாததால் திருடினோம் என்று ஒப்புக்கொண்டனர் திருடிய 600கிலோ காபி கொட்டைகளை மலை பயிர் வாங்கும் கடைகளில் விற்கப்பட்டதை மீட்டு அவற்றை பறிமுதல் செய்து சுரேஸ். சோமன். கிரீஸ் கோபி.சுனில்.சனீஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து பந்தலூர் ஜொயம் குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர்.. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…இவற்றை திருடிவர்கள் அனைவரும் பழங்குடியினர் என்பது குறிப்பிட தக்கது…..