• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

உலகக்கோப்பை கால்பந்து இறுதிபோட்டி:
ரூ.342 கோடியை அள்ளப்போவது யார்?

உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் இன்று வெற்றிபெறும் அணிக்கு ரூ.342 கோடி வழங்கப்பட உள்ளது.
22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. லீக், நாக்-அவுட் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்த நிலையில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பேராவலுடன் உற்றுநோக்கும் உலகக் கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் பிரான்ஸ் – அர்ஜென்டினா அணிகள் இன்றிரவு 8.30 மணிக்கு மோதுகின்றன. மெஸ்சியின் கடைசி உலகக் கோப்பை போட்டி இது என்பதால் தனது நீண்ட கால ஏக்கத்தை தணிக்கும் வகையில் கோப்பையை கையில் ஏந்தி அர்ஜென்டினா ரசிகர்களுக்கு ஆனந்தத்தை அள்ளிக் கொடுப்பாரா அல்லது 60 ஆண்டுகளில் அடுத்தடுத்து உலக கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையை பிரான்ஸ் அணியினர் தட்டிச் செல்வார்களா என்பதே எல்லா தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதில் வாகை சூடும் அணிக்கு ரூ.342 கோடி பரிசுத்தொகை காத்திருக்கிறது.