• Tue. Apr 30th, 2024

சைபுள்ளாவால் சிவகாமிக்கு சிக்கல்?

நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சி தலைவி சிவகாமிக்கு அவரது உதவியாரும், டிரைவருமான சைபுள்ளாவின் கலாட்டாகளால் அவரது பதவி பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது.
நீலகிரியில் நெல்லியாளம் நகராட்சி மன்ற தலைவராக பதவி வகிப்பவர் சிவகாமி இவர் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர். இவர் பதவியேற்ற நாள் முதலே நெல்லியாளம் நகராட்சியில் அடிக்கடி சர்ச்சைகள் கிளம்புவது புதிதல்ல…
நகராட்சி தலைவி சிவகாமி முழுக்க முழுக்க அவரது உதவியாளர் சைபுள்ளா கட்டுபாட்டில் இருப்பதாகவும் அவர்தான் இவரை பின்னிருந்து இயக்குவதாகவும், கூறப்படுகிறது.
எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் மீது பாலியல் குற்றங்களையும், சாதி கொடுமை என கூறி தலைமைக்கும், காவல்துறைக்கும் பொய் புகார்களை அளித்து வீழ்த்திவிடுவார்கள் என பாதிக்கபட்டவர்களே நம்மிடம் தெரிவித்தனர்.


சமீபகாலமாக சைபுள்ளாவின் ஆளுமை உச்சத்தை தொட்டு அடிதடி கலாட்டா என இறங்கியுள்ளராம். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட நெல்லியாளம் நகராட்சி நகரமைப்பு அலுவலர் அறிவுடைநம்பிக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, இவர் தொடர்பாக அவர் தேவலா காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்த நிலையில் தலைமறைவானார். அதன் ஜாமின் பெற்று வந்த அவர் நேற்று தேவாலா பகுதியில் நெல்லியாளம் நகராட்சி 17வது வார்டுக்கான நகர சபை கூட்டம் அன்னை திருமண மண்டபத்தில் நடந்தது.
கூட்டத்தில் 17 வார்டு சார்ந்த பொதுமக்கள் தங்களின் அடிப்படை தேவைகளான நடைப்பாதை, தெருவிளக்கு, தண்ணீர் பிரச்சனை போன்ற பிரச்சனைகளை மனுக்களாக ஆணையாளரிடம் வழங்கினார்கள். ஆணையாளர் அவர்களும் உங்களது அனைத்து பிரச்சனைகளும் குறிப்பிட்ட நாளுக்குள் மன்ற கூட்டத்தில் பரிசிலனை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இக்கூட்டத்தில் சைபுள்ளா தன்னை நகர் மன்ற தலைவரின் உதவியாளர் என தன்னை கூறிக்கொண்டு மன்ற கூட்டத்திற்கு வந்து ஆணையாளரிடம் ரகளையில் ஈடுபட்டார். இதற்கு கழக நிர்வாகிகள், மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் சைபுல்லாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடை நகராட்சி தலைவி கோபித்து கொண்டு கூட்டத்தை விட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து சைப்புள்ளாவும் வெளியேறினார்.
மேலும் நகராட்சி தலைவி சிவகாமி மீதும் சைப்புள்ளா மீதும் நடவடிக்கை எடுக்க கோரி தலைமைக்கு புகார் மனுக்கள் பறக்க தொடங்கியுள்ளது.
பழங்குடியின மக்களும் மக்கள் பிரதிநிதித்துவம் பெற்று முன்னேற வேண்டும் என்ற நோக்கமே சைப்புள்ள போன்றோரால் முறியடிக்கபட்டு வருவதை முதல்வர் கவனம் செலுத்தி பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நெல்லியாளம் மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *