• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

குன்னூர் அருகே காட்டு யானைகள் முகாம் -வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை காட்டேரி டபுள் ரோடு பகுதியில் நேற்று இரவு முதல் 9 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உணவு தேடி காட்டு யானைகள் அவ்வப்போது வந்த செல்வது வழக்கமாகி உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ரெடிமேடு பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் வாழைகளை சேதப்படுத்தி உள்ளது. இன்று காலை முதல் டபுள் ரோடு அருகே முகாமிட்டுள்ள யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். பட்டாசுகள் வெடித்தும், தகரங்களை தட்டியும் விரட்டும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த காட்டு யானைகள் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வருடம் தோறும் உணவு தேடி நீலகிரி மாவட்டம் பகுதிக்கு வருவது வழக்கம் தான். இரவு நேரங்களில் மேட்டுப்பாளையம் குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் பத்திரமாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.