காற்றாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் வழங்கினர்.
நீலகிரி மாவட்டம் ஆனைகட்டி அருகே ஆணிக்கல் மாரியம்மன் கோயில் கார்த்திகை மாத பூஜை கடந்த 12ம் தேதி நடைபெற்றுது.தரிசனம் முடிந்து கோயில் அருகே ஆணிக்கல் ஆற்றில் தரைப்பாலத்தில் பக்தர்கள் கோயிலில் இருந்து திரும்பி வந்துக்கொண்டிருந்தனர். அப்போது சரோஜா, வாசுகி, விமலா, சுசீலா கவரட்டி, ஜெக்கலொரை பகுதியை சேர்ந்த நான்கு பெண்கள் தரைபாலம் வழியாக ஆற்றை கடக்கும் போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் நான்கு பெண்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.இதனையடுத்து உயிரிழந்த 4 பேரின் குடும்ங்களை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனை அடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் நிதியும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா மற்றும் திமுக நிர்வாகிகள் இணைந்து தலா 1 லட்சம் நிதி என 5 லட்சம் ரூபாய் வழங்கினர்.
