• Wed. Jul 29th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

நடிகர் விஜய் மாவட்ட மக்கள் இயக்க
நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார்

விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார். அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 3 மாவட்ட நிர்வாகிகளை அவர் சந்திக்கிறார. 9 மணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, பனையூரில் உள்ள அலுவலகத்தில் சந்திப்பு நடைபெறுகிறது. மக்கள் இயக்க செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து அறிவுரைகளை வழங்குவார் எனவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நாமக்கல், சேலம், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை கடந்த மாதம் விஜய் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.