• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

உதகை அருகே ஒருவருக்கு கத்தி குத்து…

நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள முது கொலா கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார், பிக்கோல் கிராமத்தை சேர்ந்தவர் தேவன் இவர்கள் இருவரும் திருமண தரகர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் இருவர்களுக்கிடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று சிவக்குமார் கோவைக்கு செல்ல பாலகொலா சந்திப்பு பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்துள்ளார்.
அப்போது தேவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவக்குமாரை வயிற்றில் குத்தியுள்ளார். இதை பார்த்த கிராம மக்கள் தேவனை பிடித்து கட்டி வைத்து காவல்த்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த உதகை புறநகர், காந்தள் காவல் நிலைய அதிகாரிகள் தேவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கத்தி குத்து சம்பவத்தால் சிவக்குமார் ஆபத்தான நிலையில உதகை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அக்கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.