• Thu. Jul 30th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

அதிமுக பொதுக்குழு விவகாரம் -மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு

ByA.Tamilselvan

Dec 6, 2022

அதிமுக பொதுக்குழு வழக்கை வரும் 12ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு காரசாரமாக விவாதித்தது .
இந்நிலையில், இரு தரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், “அனைவரும் தயாராக இருந்தால் விசாரணையை நடத்த நாங்களும் தயாராக உள்ளோம். தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அளித்தீர்களா? இதற்கு என்ன தீர்வு?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.