• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

டிச.8 வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி நாள்

ByA.Tamilselvan

Dec 6, 2022

வாக்காளர் பட்டியலில் திருத்தம் வரும் டிச.8ம் தேதி கடைசி நாளாகும். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான பணிகள் கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், நீக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வருகிற 8-ந்தேதி வரை காலஅவகாசம் அளிக்கப் பட்டுள்ளது. இந்த பணிகளுக்காக கடந்த மாதம் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் வாக்கு சாவடி அமைக்கும் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடந்தன.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்ற பணிகளுக்காக மட்டும் கடந்த 1-ந்தேதி வரை 18 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்வதற்கு வருகிற 8-ந்தேதி கடைசி நாள் என்பதால் இன்னும் 3 நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளது.