• Wed. Apr 15th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

ரூ.3500-க்கு விற்பனையாகும் மல்லிகை பூ

ByA.Tamilselvan

Dec 3, 2022

பூ வரத்து குறைந்ததாலும் நாளை மூகூர்த்த தினம் என்பதாலும் மல்லிகைப்பூ விலை அதிகரிப்பு.
தேனி மாவட்டம் சின்னமனூர், கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகள், கூடலூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மல்லிகை பூ விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் பூக்களின் விளைச்சல் குறைந்து, வரத்தும் குறைந்துள்ளது.இதனால் மல்லிகை பூ கிலோ ரூபாய் 3500 வரை விலை உயர்ந்து விற்பனையாகி வருகிறது. அதே வேளையில் விலை உயர்வின் காரணமாக பூ மார்கெட்டில் வாடிக்கையாளர்கள் வரத்து குறைந்ததால் வியாபாரிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்