நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் 7-வது வார்டு திமுக கவுன்சிலராக அக்கட்சியின் விவசாய அணி துணை அமைப்பாளர் சத்தியசீலன் உள்ளார்.
இவரிடம் வீடு கட்ட அனுமதி வாங்கி தர சொல்லி 50ஆயிரம் பணம் கொடுக்கிறார் அதை கவுன்சிலர் பெறும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் பிரச்சினை விஸ்வரூபமெடுத்துள்ளது.


இதுதொடர்பாக “நமது அரசியல் டுடே கூடலூர் நிருபர் காங்கேஷ் கவுன்சிலர் சத்தியசீலனை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் கூடலூர் நகராட்சி சேர்மன் பரிமளா சொல்லிதான் வாங்கி 50,000 ரூபாய் பணத்தை அவரிடம் கொடுத்தேன் அந்த பணத்தில் எனக்கு 5,000 ரூபாய் கொடுத்தார் மேலும் நான் வெண்ணிலாவின் ஆதரவாளன் என்பதால், சேர்மன் என்னை திட்டமிட்டு சிக்க வைத்துள்ளார் என ஒரே போடாக போட்டுடைத்தார்” இதனால் கூடலூர் பகுதியில் மேலும் பரபரப்பை அதிகபடுத்தியுள்ளார்.
மொத்தத்தில் இந்த சம்பவம் கூடலூர் பகுதி மக்கள் மனதில் கூடலூர் நகராட்சி தலைவி மீதும் கவுன்சிலர் மீதும் பெரும் அதிர்ப்தியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.













; ?>)
; ?>)
; ?>)