• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆப்கானிஸ்தான் பள்ளியில் பயங்கிரம் – 7 மாணவர்கள் உயிரிழந்த பரிதாபம்!..

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான்கள் கொண்டுவந்துள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்வுகளும் நடந்தபடியே உள்ளது. இதில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காபூலில் மசூதி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

படிப்பில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்ததுடன், கடந்த 20 வருட பட்டப்படிப்புகள் பயன்படாது என ஆப்கானிஸ்தான் உயர்கல்வித்துறை மந்திரி சமீபத்தில் கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் கோஸ்ட் மாகாணத்தில் மதம் சார்ந்த ஒரு பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது. கையெறி குண்டு ஒன்று அந்தப் பள்ளியில் வெடிக்க செய்யப்பட்டதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 15 பேர் காயமடைந்து உள்ளனர்.