• Sun. Aug 2nd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரசிகர்களை சந்திக்கும் விஜய்

ByA.Tamilselvan

Nov 21, 2022

நடிகர் விஜய் 5 ஆண்டுகளுக்கு பின் ரசிகர்களை சந்திக்க இருப்பதால் விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
நீண்ட இடைவெளிக்க பிறகு விஜய் ரசிகர்களை சந்திக்கிறார். பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.கொரோனா தொற்று உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த 5 ஆண்டுகளாக, புகைப்படம் எடுப்பதை நிறுத்தி வைத்திருந்தார்.
அண்மையில், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்ளுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன்பிறகு தற்போது ரசிகர்களை விஜய் சந்திக்க உள்ளார்.பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்து விஜய் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். ரசிகர்களுடன் விஜய் அடுத்தடுத்த வாரங்களில், பிற மாவட்ட ரசிகர்களுடனும் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொள்ள உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் ரசிகர்கள் விஜய்யை காண குவிந்து வருகின்றனர்.