கூந்தல் பொலிவு மற்றும் மனம் பெற
- மரிக்கொழுந்து இலையை மைய அரைத்து தேய்த்து தலை குளித்து வர கூந்தல் மணம் பெறும்.
- முருங்கை இலை மற்றும் கருவேப்பிலை சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து தேய்த்துவர கூந்தல் கருகருவென்று வளரும்.
- வாழைப்பழம், தயிர் இரண்டையும் மைய அரைத்து கூந்தலில் தேய்த்து வர கூந்தல் பளபளப்பாக இருக்கும்.
- எப்பொழுதும் ஷாம்பூ பயன்படுத்தும் பொழுது அதனுடன் சிறிது தயிர் கலந்து தேய்த்து வந்தால் முடி கொட்டுதல் கூந்தல் மிருதுவாக காணப்படும்.
- வெந்தயத்தை நன்கு ஊற வைத்து அரைத்து அதனுடன் தயிர், முட்டையின் வெள்ளைக்கரு, எலுமிச்சை சாறு இதனை நம் தலையில் சிறிது நேரம் தடவி ஊற வைத்து குளித்து வர வெப்பம் தணிந்து கூந்தல் பொலிவாகவும் மணமாகவும் இருக்கும்.