சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க
- முகத்தை நன்கு கழுவிய பின் ஏதாவது ஒரு பேஸ் பேக்கினை அப்ளை செய்யுங்கள் சரியாகிவிடும்
- சுத்தமான பவுலில் ஒரு ஸ்பூன் முல்தானிமட்டி சந்தனம் காய்ச்சாத பசும்பால் நன்றாக கலந்து சருமத்தில் அப்ளை செய்த பின் 20 நிமிடங்கள் அப்படியே காய விட்டு குளிர்ந்த நீரால் சருமத்தை கழுவ வேண்டும் வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து செய்தால் எண்ணெய் பசை நீங்கி சருமம் பட்டு போல் பளபளக்கும்
- தினமும் அரிசி கலைந்த நீரில் முகம் கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகளை மட்டும் நீக்காமல் உள்ளிருக்கும் அதிக எண்ணெய் மற்றும் கரும்புள்ளிகளை அகற்றும்
- சருமத்தை ஆரோக்கியமாகவும் பாதுகாக்கவும் சருமம் பொலிவாக சருமத்தில் ஏற்படும் பருக்கள் மறையவும் தினமும் ஒரு முறையாவது ஆவி பிடிப்பது நல்லது இவ்வாறு செய்வதினால் சரும செல்கள் புத்துயிர் அளிக்கின்றது இதனால் சருமம் என்றும் பொலிவுடன் காணப்படும்
- முகம் பொலிவுடன் காணப்பட வேண்டும் என்றால் பழங்களை வைத்து மாஸ்க் போட்டால் அதில் உள்ள சத்துக்கள் முகத்தை பளிச்சென்று பொலிவுற வைக்கும் அதில் மாம்பழம் பப்பாளி எலுமிச்சை திராட்சை வாழை ஆரஞ்சு ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்கள் மாஸ்க் போடுவதற்கு மிகவும் சிறந்த பழங்கள்
- சருமம் மென்மையாகவும் ஈரப்பதத்துடனும் இருப்பதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை தடவி அரிசி அரிசி மாவில் சிறிது எலுமிச்சம் சாறை கலந்து முகத்திற்கு பேக் போட்டு வர முகம் பளபளப்பாகும்