• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அக்னிபாத் திட்டத்தின் கீழ் 9.5 லட்சம் விண்ணப்பங்கள்…

Byகாயத்ரி

Aug 4, 2022

இந்திய ராணுவத்தின் கடற்படை, விமானப்படை மற்றும் காலாட்படையில் 4 ஆண்டுகள் தற்காலிக ராணுவ பணிகளை மேற்கொள்ளும் அக்னிபாத் ராணுவ பணி திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தை எதிர்த்து முதலில் நாடு முழுவதும் பல பகுதிகளில் கலவரங்கள் நடந்தன. எனினும் பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெற தொடங்கப்பட்ட நிலையில் பலரும் ஆர்வமாக இந்த பணிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பி வருகின்றனர். இந்திய ராணுவத்தின் கப்பற்படையில் அக்னிபாத் திட்டத்தில் சேர ஜூலை 1ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு சமீபத்தில் முடிவடைந்தது. கடற்படையில் மொத்தம் 3 ஆயிரம் பணியிடங்கள் உள்ள நிலையில், இந்த பணியிடங்களுக்காக 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 82,500 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.