• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் 8400 தபால் வாக்குகள் பதிவு

Byவிஷா

Apr 18, 2024

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 8,400 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், திருச்சி தொகுதியில் மட்டும் 3,369 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு பெறும் பணி கடந்த 8ம் தேதி முதல் நடந்தது. இந்நிலையில், திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு மையத்தில் இன்று (ஏப்ரல் 17) மாநிலம் முழுவதும் இருந்து கொண்டு வரப்படும் தபால் ஓட்டுகள் பிரிக்கப்பட்டு தொகுதி வாரியாக வழங்கப்பட்டது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தமாக 8,400 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. திருச்சி தொகுதியில் மட்டுமே 3,369 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.