நாட்டின் 76 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகரில் அமைந்துள்ள எம். வி. எம். கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தேசிய கொடி ஏற்றி, மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பள்ளியின் தாளாளர் எம். மருதுபாண்டியன் தேசிய கொடி ஏற்றி கொடி வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பள்ளி நிர்வாகிகள், விவசாய அணி மாநில துணைத்தலைவர், மணி முத்தையா மற்றும் வள்ளி மயில் ஆகியோர் கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து தேச தலைவர்களின் வேடம் அணிந்து மாணவ, மாணவிகள் சுதந்திர வீர உரை ஆற்றினார்கள். குறிப்பாக மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார் சுபாஷ் சந்திர போஸ், ஜான்சி ராணி, பகத்சிங், திருப்பூர் குமரன் மற்றும் சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களின் வேடம் அணிந்து அவர்களின் வீர வசனங்களை பேசியது. மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடையே ஆரவாரத்துடன் கைதட்டல்களை பெற்றுத் தந்தது. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பள்ளி தாளாளர் எம்.மருதுபாண்டியன் பரிசுகளை வழங்கினார். பள்ளி முன்பு இந்திய வரைபடம் வரைந்து மாணவ, மாணவிர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முன்னதாக பள்ளியில் உள்ள மகாத்மா காந்தி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கலைவாணி ஆகியோர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சிகளை பள்ளி முதல்வர் செல்வம் தொகுத்து வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் தீபிகா மற்றும் ஆசிரியை ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.