• Thu. Mar 27th, 2025

75வது குடியரசு தினம் – தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர்.

BySeenu

Jan 26, 2024

கோவை மாவட்டத்தில் வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தேசிய கொடியை பறக்கவிட்டு மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அலங்கார ஊர்தியில் சென்று காவல்துறை அணிவகுப்பை பார்வையிட்டு குழந்தைகளுடன் இணைந்து மூவண்ண பலூன்களை பறக்கவிட்டார். பின்னர் காவல் துறை அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார்.

பின்னர் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 208 அரசுத் துறை பணியாளர்கள் மருத்துவத்துறை அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். அதனை தொடர்ந்து காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாநகர காவல் ஆணையாளர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்களும் காவல்துறை மரியாதையை ஏற்று கொண்டனர்.