• Wed. Apr 15th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

75-சவரன் நகை மற்றும் 2-லட்சம் ரூபாய் ரொக்கம் திருட்டு தக்கலை போலீசார் விசாரணை…!

Byadmin

Aug 4, 2021

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முத்தலகுறிச்சி பகுதியை சேர்ந்தவர்கள் வில்சன், கிரேஸ்மேரி தம்பதியர் புதுக்கோட்டையில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் 57-வயதான கிரேஷ்மேரி கணவர் வில்சன் ஒன்றரை -ஆண்டுகளுக்கு முன் தவறிய நிலையில் தனது ஒரே மகனுக்கு திருமணம் செய்து வைத்து அவர் கோவில்பட்டியில் வேலை பார்த்து வரும் நிலையில் கிரேஷ்மேரி புதுக்கோட்டையில் தங்கி தனது ஆசிரியர் பணியை தொடர்ந்து வந்தார். முத்தலக்குறிச்சி ஊரில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டை தனது உறவினரான நேசம் என்பவர் கண்காணிப்பில் விட்டு சென்றுள்ளார் கழிந்த ஞாயிற்று கிழமை முத்தலக்குறிச்சியில் உள்ள தனது சொந்த வீட்டில் மகன் மற்றும் மருமகளுடன் தங்கிய கிரேஷ்மேரி அன்று மாலை மீண்டும் குடும்பதினருடன் திரும்பி சென்றுள்ளனர். இந்நிலையில் வீட்டை பாதுகாத்து வந்த நேசம் இன்று காலை வீட்டு தோட்டத்திற்கு தண்ணீர் தெளிக்க சென்ற போது வீட்டின் முன் கதவு திறந்த நிலையில் காணப்பட்டதால் உடனடியாக போலீசாருக்கும் வீட்டு உரிமையாளர் கிரேஷ்மேரிக்கும் தகவலளித்தார்.
கிரேஷ்மேரி தக்கலை போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்துகையில் அந்த வீட்டில் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதன் உள்ளே இருந்த 30-லட்சம் மதிப்பிலான 75-சவரன் தங்க நகைகள் மற்றும் 2-லட்சம் ரூபாய் ரொக்க பணத்தையும் திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் மோப்ப நாய் ஏஞ்சல் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சம்பந்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அவர்கள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.