• Fri. Apr 26th, 2024

மதுரை அவனியாபுரம் மகாகாளியம்மன் கோவிலில் 73 வது ஆண்டு பங்குனி உற்சவ விழா

Byp Kumar

Apr 11, 2023

மதுரை அவனியாபுரம் மகாகாளியம்மன் கோவிலில் 73 வது ஆண்டு பங்குனி உற்சவ விழா 15 அடிக்கு உயரம் கொண்ட திரிசூலம் அழகு குத்தியும், குழந்தையுடன் பரவ காலடியில் வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மதுரை அவனியாபுரம் காளியம்மன் திருக்கோவில் 73 வது ஆண்டு பங்குனி உற்சவ விழா கடந்த இரண்டாம் தேதி காப்பு கட்டுகளுடன் தொடங்கியது. இந்த திருவிழா 15 நாட்கள் வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம், இந்த நிலையில் முக்கிய நிகழ்வாக பூக்குழி உற்சவ விழா நடைபெற்றது.


இதில் குழந்தைகள் பெண்கள் பெரியவர்கள் என பால் குடம் எடுத்து 15 அடிக்கு மேல் அழகு குத்தியும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கியும், பரவ காவடியில் குழந்தையுடன் வந்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். முன்னதாக இன்று இரவு பொங்கல் உற்சவ விழா வெகு விமர்சியாக நடைபெற்று முடிந்தது.
இந்த விழாவிற்காக ராமநாதபுரம் மாவட்டம் மதுரை சுற்றுவட்டார பகுதியாக சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
மகாகாளியம்மன் கோவிலில் குழந்தை வரம் செல்வ செழிப்பு உள்ளிட்ட வேண்டிய வரத்தை வழங்கிய பின்னர் அதற்காக வேண்டி நேர்த்திக்கடன் செலுத்துவது மிகச் சிறப்புகளில் ஒன்றாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *