• Thu. Dec 12th, 2024

திருப்பரங்குன்றத்தில் தீர்த்த உற்சவம்..!

Byவிஷா

Apr 11, 2023

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் தீர்த்த உற்சவம் நடைபெற்றது.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மார்ச் 26ல்கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த பங்குனி திருவிழாவில் தினமும் மாலை நேரங்களில் ஒரு வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு நேற்று உற்சவர் சன்னதியில் சுவாமி, தெய்வானை, சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை, விநாயகர். அஸ்தரதேவர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளினார்கள். உச்சிகால பூஜைக்கு பின்பு பல்லக்கில் அஸ்தரதேவர், தங்கமயில் வாகனத்தில் சுவாமி, தெய்வானை சரவணப் பொய்கையில் எழுந்தருளினர். அங்கு தீர்த்த உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.