

மதுரை மாநகரில் பழிக்குப்பழி கொலை மற்றும் வழிப்பறி செய்வதற்காக வாள்களுடன் சுற்றிதிரிந்த 7 பேர் கைது செய்து, வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாநகரில் வாள்களுடன் சுற்றிதிரியும் குற்றப் பிண்ணனியாளர்களால் பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மதுரை மாநகர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பழிக்குப்பழி கொலை செய்யும் திட்டத்துடனும், வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நோக்கத்தோடு கையில் கத்தி, வாள்களுடன், சுற்றித்திரிந்த மதுரையை சேர்ந்த கார்த்திக்(19), ரகுமான்கான்(29), தினேஷ்வரன்(23), ராம்குமார்(36), மகாராஜன்(25), ராஜ்குமார்(23), கரண்(24) ஆகி்ய 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் பழிக்குபழியாக கொலை செய்வதற்காக, மது அருந்த, முந்தைய வழக்குகளிற்கான செலவிற்காக பண பறிப்பில் ஈடுபட திட்டமிட்ட நிலையில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மதுரை மாநகர காவல் ஆணையர் எல்கைக்கு உட்பட்ட ஜெய்ஹிந்த்புரம், திடீர்நகர், சுப்பிரமணியபுரம், எஸ்.எஸ்.காலனி செல்லூர் ஆகிய காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆயுதங்களுடன் சுற்றிதிரிந்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் – குற்றப்பிண்ணனியில் உள்ளவர்களின் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதில் அதிகளவிற்கு இளைஞர்களே ஆயுதங்களுடன் சுற்றித்திரித்ததாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் மதுரை மாநகர பகுதிகளில் கொலைக்கான திட்டமிடலோடு சுற்றித்திரிந்து கைதாகியுள்ளனர்.

மேலும் மாநகரில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில் வழிப்பறி மேற்கொள்வதற்காக ஆயதங்களோடு சுற்றி திரிந்தவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மாநகர கவால்துறை சார்பில் காவல்துறையினர் மேற்கொள்ளும் தீவிர வாகன சோதனையின் போதும், ரோந்து பணிகளின் போதும் இதுபோன்ற பின்புல குற்றவாளிகள் கைது செய்யப்படுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இதுபோன்ற குற்றபிண்ணனி உள்ளவர்களை தீவிரமாக காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

