• Wed. Mar 26th, 2025

கரும்புக்கடை பகுதியில் 7 அடி சாரைப் பாம்பு மீட்பு

BySeenu

Mar 11, 2025

கரும்புக்கடை பகுதியில் 7 அடி சாரைப் பாம்பு மீட்டு, வனத் துறையினர் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

கோவை, கரும்புக்கடை அலிப் காலனி பகுதியில் இன்று அப்பகுதி மக்கள் புதர் மண்டிய பகுதியில் 7 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு ஒன்று நடமாடுவதைக் கண்டு அச்சம் அடைந்தனர். உடனடியாக, பாம்பு பிடி வீரர் அமீனுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில், விரைந்து வந்த அமீன், அப்பகுதி மக்களின் உதவியுடன் புதரில் பதுங்கியிருந்த சாரைப்பாம்பை பத்திரமாக மீட்டார். பொதுமக்கள் பதற்றம் அடைந்து இருந்த நிலையில், அமீனின் துரிதமான மற்றும் பாதுகாப்பான மீட்பு நடவடிக்கையால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். மீட்கப்பட்ட சாரைப் பாம்பு உடனடியாக வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத் துறையினர், பாம்பின் உடல்நிலையை பரிசோதித்து, அது ஆரோக்கியமாக இருப்பதைக் கண்டு அறிந்தனர். பின்னர், அந்த சாரைப் பாம்பு பாதுகாப்பான ஆனைகட்டி வனப் பகுதிக்குள் விடுவிக்கப்படும் என வனத் துறையினர் தெரிவித்தனர்.


பாம்பு பிடி வீரர் அமீனின் துரித நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் தங்களது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்தனர். வனப்பகுதியை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தினர். மேலும், பாம்புகளை கண்டால் உடனடியாக வனத்துறை அல்லது பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.