சென்னை மாகாணம் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்ற வேண்டும் என உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் 69ம் ஆண்டு நினைவேந்தல் வெம்பக்கோட்டை சிபியோ உண்டு உறைவிடப் பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு புத்தாடைகள்
மற்றும் இரவு அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்புஅழைப்பாளர்கள் சிவகாசி காளீஸ்வரி குழுமம் சார்பில் அண்ணாமலைச்சாமி-விஜயமோகினி குழந்தைகளுக்கு புத்தாடைகளை வழங்கினார்கள்.

ஜெயராஜ் மாவட்ட செயலாளர்.அறிவு ஒளி ஆண்டவர், அமுல்ராஜ், மாநகர தலைவர் ஆரோக்கியராஜ், செயற்குழு உறுப்பினர் பழவிளை ரமேஷ் கண்ணன், மண்டல தலைவர் பழனிகுமார், செயற்குழு உறுப்பினர் ஜோதிமுருகன், மாநகர இளைஞர்அணி தலைவர் மணிகண்டன், மாநகர இளைஞர்அணி செயலாளர் அருணாச்சலம், மாநகர இளைஞர்அணி துணைச் செயலாளர் சசிபிரபு, தகவல் தொழில்நுட்ப அணி முகுந்தன்,
வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி மன்றம் மாவட்ட செயலாளர் முத்துராஜ், அப்பைய நாயக்கன்பட்டி கணேசன், மேலண்மறைநாடு பழனிச்சாமி, மனோஜ், சுபாஸ் ,
பிரான்சிஸ் டேவிட் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். காளிராஜ் நன்றி கூறினார்.