• Sun. Jul 26th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

பொள்ளாச்சியில் வாகன சோதனையில் ரூபாய் 69,900 பறிமுதல்!

தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் நடத்த ஆணை பிறப்பித்து இருந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் பொள்ளாச்சி-கோவை சாலை, உடுமலை சாலை மற்றும் முக்கிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை சாலை பறக்கும் படையினர் உடுமலையிலிருந்து வந்த ஆல்டோ காரை சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ 69,900 ரூபாயை பறிமுதல் செய்து உள்ளாட்சி நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் தானுமூர்த்தியிடம் ஒப்படைத்தனர்.