• Wed. Jun 7th, 2023

தன் மகனுக்காக பொதுமக்களிடம் ஓட்டு கேட்கும் விஞ்ஞானி!

பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மையம், எஸ்டிபிஐ மற்றும் கூட்டணிக் கட்சிகள் வேட்பாளர்கள் தேர்தலில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்,

இந்நிலையில் மக்கள் நீதி மையம் சார்பில் 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதையடுத்து 35வது வார்டில் போட்டியிடும் கோவை மாவட்ட செயலாளர் பாபு பிரசாத். இவரது தந்தை டாக்டர் அழகர் ராமானுஜம். இவர் மகாலிங்கம் கல்லூரியில் 1990ம் ஆண்டு கல்லூரி முதல்வராக பதவி வகித்துள்ளார். பின் வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளை மூலமாக புதிய இயற்பியல் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதற்காக உலக விஞ்ஞானிகள் மாநாட்டில் ஸ்பெயினில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தனது மகன் போட்டியிடும் 35-வது வார்டில் உள்ள பொதுமக்களை சந்தித்து விஞ்ஞானி அழகர் ராமானுஜம் ஓட்டு சேகரிப்பில் ஈடுபடுகிறார். பொதுமக்களின் நலன் கருதி சமூகத்துக்கு நல்லதொரு மாற்றத்தை தரவேண்டுமென டாக்டர் அழகர் ராமானுஜம் தெரிவித்தார். இதில் மக்கள் நீதி மைய கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *