கோவையில் 60 பவுன் நகை அபேஸ் செய்து கோர்ட்டில் ஒப்படைக்காமல் டிமிக்கி கொடுத்த பெண் போலீஸ் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. கோவை சிங்காநல்லூர் குற்றப்பிரிவு போலீஸ் சொப்பன சுஜா திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட 60 பவுன் நகையை கோர்ட்டில் ஒப்படைக்காமல் அபகரித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு 7-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சில ஆவணங்களை அரசுத் தரப்பில் கேட்டு சொப்பன சுஜா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே ஆவணங்கள் கொடுக்கப்பட்டு விட்டதால் மேலும் ஆவணங்களை கொடுக்க முடியாது என அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து வழக்கு விசாரணையை தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.