• Sat. Apr 27th, 2024

கேரளாவில் கனமழையில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

ByA.Tamilselvan

Aug 2, 2022

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 6 பேர் உயிரிழந்ததாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. முதல் 2 வாரங்களுக்கு லேசான மழை பெய்து வந்தது. அதன் பிறகு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தின் மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதற்கிடையே, கேரளாவின் தென் மாவட்டங்களில் வரும் புதன்கிழமை வரை கனமழை பெய்யும். அதன்பின், வட மாவட்டங்களில் மழை தீவிரமடையும். 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 2 மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது வானிலை மையம். மேலும், மாநில அரசு சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் காணாமல் போய் உள்ளார். கனமழை காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *