உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் – கஞ்சா கடத்தி வந்த கஞ்சா வியாபாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பகுதிக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எழுமலை காவல் நிலைய காவல் ஆய்வாளர் சுப்பையா தலைமையிலான போலிசார், எழுமலையின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


மீனாட்சிபுரம் விலக்கு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த நபரை இடைமறித்து சோதனை நடத்தியதில் கஞ்சா கடத்தி வந்தது கண்டறியப்பட்டு 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் கஞ்சா கடத்தி வந்த கோடாங்கிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கணேசன் என்ற குண்டு கணேசனை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணேசன் மீது பல்வேறு கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்தவர் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.